நாற்று நடும் போராட்டம்

6 months ago 29

வேப்பூர், அக். 17: வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தில் உரிய வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி நேற்று சாலையில் தேங்கிய சகதியில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் சேறும் சகதியுமாக இருந்த இடத்தை பொக்லைன் இயந்திரம் கொண்டு சரி செய்து சிமெண்ட் சாலை வடிகால் வசதி உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post நாற்று நடும் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article