நாராயணபுரம் ஏரிக்கரையில் உள்ள குப்பை குவியலில் தீவிபத்து
வேளச்சேரி: பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையோரம் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையில் சிலர் இளநீர் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகளில் சேகரமாகும் இளநீர் மட்டைகள், அதே பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த பகுதி கோரை புற்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இந்த இளநீர் மட்டைகள் காய்ந்து இருந்த நிலையில், நேற்று இவை திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றில் தீ பரவி, அருகில் இருந்த காய்ந்த கோரை புற்களும் மளமளவென எரிந்தது.
இதனால், கரும்புகை சூழ்ந்து, சுற்றி உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலையில் பரவியதால், பொதுமக்கள் மற்றும் வாக ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் கல்யாணராமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.
The post நாராயணபுரம் ஏரிக்கரையில் உள்ள குப்பை குவியலில் தீவிபத்து appeared first on Dinakaran.