
புனே,
மராட்டிய மாநிலம் புனேவில் ரவிவர் பெத் பகுதியில் உள்ள பர்தேஷி வாடாவில் ஒரு பசு மாட்டை தெருநாய்கள் துரத்திச்சென்றன. இதனால் பயந்து போன பசு அங்கும் இங்கும் என மிரண்டு ஓடியது. பின்னர் அந்த பசு அப்பகுதியில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு ஏறியது.
இந்த சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் கட்டிடத்திற்கு விரைந்தனர். குறுகிய மர படிக்கட்டில் மூன்றாவது மாடிக்கு ஏறியதால் பசுவால் கீழே வர முடியவில்லை. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பசுவை மீட்க முயற்சித்தனர். இருப்பினும் எந்த முயற்சியும் பலனலிக்க வில்லை. இதனையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பசுவை மீட்க சில முயற்சிகளை செய்து பார்த்தனர். பின்னர் கடைசி முயற்சியாக, கிரேன் மற்றும் பாதுகாப்பு பெல்ட்களைப் பயன்படுத்தி பசுவை பாதுகாப்பாக மீட்டனர்.