நாய் கடித்து மாணவன் பலி: ஒரகடம் அருகே பரிதாபம்

6 hours ago 2

ஸ்ரீபெரும்புதூர்: நாய் கடித்து சிகிச்சை பெற்றுவந்த மாணவர் பரிதாபமாக இறந்தார். சென்னை அருகே ஒரகடம் வடக்குப்பட்டு கிராமம், புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மகன் விஷ்வா (13). இவர் 8ம் வகுப்பு படித்தார். கடந்த 7ம்தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த விஷ்வாவை தெரு நாய் ஒன்று வலது கையில் கடித்துவிட்டது.

உடனடியாக அவருக்கு ரெட்டிப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று விஷ்வா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post நாய் கடித்து மாணவன் பலி: ஒரகடம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Read Entire Article