சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது வெற்றிக்குமரன் நிருபர்களிடம் கூறியதாவது: சீமானின் செயல்பாடுகளில் மாற்றம் வர தொடங்கியது. கட்சியில் எதேச்சதிகாரமாக செயல்பட்டார். பல சமயங்களில் உடன்பாடு இல்லை என்றாலும் சில செயல்பாடுகளில் அவரை பின் தொடர்ந்தோம். சீமானால் தமிழ்தேசியத்தை வெல்ல வைக்க முடியாது. அதற்கான வேலைகளையும் சீமான் செய்யவில்லை.
நாம் தமிழர் கட்சியில் சீமானால் புறக்கணிக்கப்பட்ட அவரது தலைமை பிடிக்காமல் வெளியே வந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து செயல்பட உள்ளோம். தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்கிற பெயரில் இயக்கத்தை தொடங்கி உள்ளோம். நவம்பர் 27 வீரவணக்க நாளை நடத்த உள்ளோம். 2026ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்க போகிறது. நாம் தமிழர் கட்சியில் வளர்ந்து வருபவர்களை சீமான் அனுமதிப்பதில்லை. அவர்களை அடக்கி வைக்கவே விரும்புகிறார். நாம் தமிழர் கட்சியை வெளியில் இருந்து பார்த்தால் பெரிய அளவிலான கட்சியாக தெரியும், ஆனால் உள்ளே இருந்து பார்த்தால்தான் தெரியும் அது ஒன்றுமில்லாத கட்சி என்பது. இவ்வாறு அவர் கூறினார்.
The post நாம் தமிழர் கட்சி ஒன்றுமில்லாத கட்சி: சீமான் யாரையும் வளர விடுவதில்லை.! நீக்கப்பட்டவர்கள் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.