
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று வாராந்திர எள் ஏலம் நடைபெற்றது.
இதில் 164 மூட்டைகளில் விவசாயிகள் எள் கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ கருப்பு எள் ரூ.139 முதல் ரூ.176.30 வரையிலும், வெள்ளை எள் ரூ.101.20 முதல் ரூ.134.50 வரையிலும், சிவப்பு எள் ரூ.113.50 முதல் ரூ.142.90 வரையிலும் விற்பனையானது. மொத்தத்தில் 164 எள் மூட்டைகளும் ரூ.16.78 லட்சத்துக்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.