
சேலம்,
சேலத்தில் நாளை (23.04.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தும்பல் துணைமின் நிலைய பகுதியான, மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.
இதேபோல், புத்திரகவுண்டன்பாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான பெத்தநாயக்கன்பாளையம், சின்னமசமுத்திரம், காளிசெட்டியூர், காந்திநகர், ஏத்தாப்பூர், கணேசபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.
இதேபோல் மேட்டுப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட காரிப்பட்டி, சின்னகவுண்டாபுரம் ஒருபகுதி, பத்தாங்கல் மேடு, மேட்டுப்பட்டி ஒருபகுதி, எம். பெரும்பாளையம், கருமாபுரம், செல்லியம்மன் நகர் வடக்கு ஆகிய பகுதிகள்.
மின்னாம்பள்ளி துணைமின் நிலையத்திற்குட்பட்ட ராமலிங்காபுரம், மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையம், விளாம்பட்டி, ஏரிபுதூர், வெள்ளியம்பட்டி ஒருபகுதி, பாலப்பட்டி, கூட்டாத்துப்பட்டி ஒருபகுதி, காந்தி நகர், செங்குட்டை ஆகிய பகுதிகள்.
உடையாப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட குண்டுகல்லூர் ஒருபகுதி, மாசிநாயக்கன்பட்டி, இ.பி.காலனி, பி.டி.ஆர்.நகர், கே.எம்.நகர் ஒருபகுதி, ராமர் கோவில் ஒருபகுதி, முட்டைக்கடை, மேட்டுப்பட்டி தாதனூர் ஒருபகுதி, பாலாஜி காலனி, நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளிலும் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை வாழப்பாடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.