நாமக்கல்: பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு

1 week ago 4

நாமக்கலில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் காமாட்சி. இவர் இன்று காவல் நிலையத்தில் ஓய்வறைக்கு சென்று ஓய்வு எடுத்துள்ளார்.

ஆனால், ஓய்வறையில் இருந்து அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் ஓய்வறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். காமாட்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

காமாட்சி மாரடைபால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article