
காத்மாண்டு,
நேபாளம் - சீனா எல்லையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இரு நாட்டின் எல்லைப்பகுதியில் உள்ள ரசுவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், நேபாளம் - சீனாவை இணைக்கு நட்பு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 19 பேர் மாயமாகியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய 57 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வெள்ளத்தில் மாயமான எஞ்சியோரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.