நான்கு வழிச்சாலையாகிறது தஞ்சாவூர் – ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை

4 weeks ago 5

 

தஞ்சாவூர், டிச.21: தஞ்சாவூர்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக தரம் உயர்த்துவது குறித்து தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வம், முரசொலி எம்பி ஆகியோர் ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் – அரியலூர் 40 கிமீ., தேசிய நெடுஞ்சாலை நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. சுற்றுலாத்தலமாகவும், வேளாண்மைத் தலைநகராகவும் உள்ள தஞ்சாவூர், அதிக சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ள நகரமாகவும், வேளாண்மைத் தொழில் மிகுந்த பகுதியாகவும் உள்ள அரியலூர் நகரங்களை இணைக்கும் சாலையை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்துமாறு தஞ்சாவூர் எம்பி முரசொலி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரியை டெல்லியில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

அதையடுத்து, தஞ்சாவூர் முதல் அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் வரையிலான 100 கிமீ., தூர இரண்டுவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளது. அதில், சென்னை தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வம் முதல்கட்டமாக, தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் முரசொலி எம்.பி., துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., ஆகியோருடன் சென்று, ஆய்வு செய்தார்.

The post நான்கு வழிச்சாலையாகிறது தஞ்சாவூர் – ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை appeared first on Dinakaran.

Read Entire Article