சென்னை,
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள பசுமை வெளி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களையும், போராட்டக்குழுவினரையும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திப்பார் என அக்கட்சி அறிவித்திருந்தது.
அதன்படி, விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் தற்போது பரந்தூர் சென்றடைந்தார். அவரை போராட்டக்குழுவினர் வரவேற்றனர்.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றவரும் கூட்டத்தில் பிரசார வாகனத்தில் நின்றவாறு விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது,
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல... ஆனால், இந்த இடத்தில் வரக்கூடாதுஎன கூறுகிறேன்