திருவனந்தபுரம்,
பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா. நடிகை கியாரா அத்வானியின் கணவரும் நடிகருமான இவர் தற்போது இயக்குனர் துஷார் ஜலோட்டா இயக்கத்தில் 'பரம் சுந்தரி' படத்தில் நடித்து வருகிறார்..
தினேஷ் விஜனின் மடாக் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா 'பரம்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், 'சுந்தரி'யாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.
இப்படம் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சித்தார்த் மல்ஹோத்ரா கேரளாவில் படப்பிடிப்பை துவங்கி உள்ளார்.