
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரவி மோகன் சென்னை எழும்பூரில் திமுக சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "இங்கு நிறைய அரசியல்வாதிகள் இருக்கிறார்கள், நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறி இருக்கிறார்கள், ஆனால் நான் எப்போதும் போல நடிகனாகவே இருக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.