
லாகூர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் லக்கி மார்வட் தொகுதியை சேர்ந்த பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சப் கட்சி எம்.பி. ஷர் அப்சல்கான் மர்வட். இவரிடம் இந்தியாவுடனான போர் பதற்றம் குறித்து செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் துப்பாக்கியுடன் எல்லைக்கு செல்வீர்களா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த மார்வட், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் நான் பாகிஸ்தான் சென்றுவிட்டுவேன்' என்றார்.
மேலும், பதற்றத்தை தணிக்க தற்போதிய சூழ்நிலையில் இருந்து இந்திய பிரதமர் மோடி பின்வாங்குவாரா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த மர்வட், நான் சொல்வதை கேட்டுக்கொண்டு பின்வாங்குவதற்கு மோடி என்ன என் அத்தை மகனா?' என்றார்.