இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தினர் 5 பேர் கைது

4 hours ago 3

சில்லாங்,

வங்காளதேசம், மியான்மரில் இருந்து பலரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து பல்வேறு மாநிலங்களில் குடியேறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவ்வாறு சட்டவிரோதமாக குடியேறும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேகாலயா எல்லையில் பாதுகாப்புப்படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிழக்கு ஹசி மலைப்பகுதி, கிழக்கு கரோ மலைப்பகுதியில் இருந்து வங்காளதேசத்தில் இருந்து 5 பேர் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட பாதுகாப்புப்படையினர் அந்த 5 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இதில் 3 பேர் ஏற்கனவே இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து குஜராத்தில் உள்ள துணிக்கடையில் டெய்லர்களாக வேலை செய்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் ரோந்து பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article