நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன்- சி.எஸ்.கே. முன்னாள் வீரர்

2 months ago 15

திருவனந்தபுரம்,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே., குஜராத் அணிகளுக்காக ஆடி உள்ளார். இவரை சி.எஸ்.கே ரசிகர்கள் சின்ன தளபதி என்று அழைப்பார்கள். சர்வதேச மற்றும் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா தற்போது லெஜண்ட்ஸ் லீக், சாம்பியன்ஸ் லீக் போன்ற தொடர்களில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு ரெய்னா சென்றார்.அப்போது கேரளா மீது தனது அபிமானத்தை வெளிப்படுத்தினார். மேலும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது,

நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன். அவர் திறமையானவர். இன்னும் அதிரடியான ஆட்டங்களை வருங்காலத்தில் விளையாடுவார். நல்ல தலைமைத்துவமும் கொண்டவர். சர்வதேச அரங்கில் அவர் ஜொலிப்பார் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article