மராட்டியத்தில் ஆயுத தொழிற்சாலையில் விபத்து- ஒருவர் பலி

5 hours ago 2

மும்பை,

மராட்டிய மாநிலம் பந்தாரா மாவட்டத்தில் ஒரு ஆயுத தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புக்குழுவினர் தொழிற்சாலையில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே கூறுகையில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. மருத்துவக்குழு அங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதுதொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள பதிவில், பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 13 முதல் 14 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை கிடைத்த முதற்கட்ட தகவல்களின்படி, துரதிர்ஷ்டவசமாக, ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். 5 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் உள்ளனர், மேலும் அனைத்து வகையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்புப் படைகளுடன் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மருத்துவ உதவிக்காக குழுக்கள் தயாராக உள்ளன. சம்பவத்தில் உயிரிழந்த ஒருவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Read Entire Article