நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் கடினமான பந்துவீச்சாளர் இவர்தான் - மேக்ஸ்வெல் பாராட்டு

2 weeks ago 4

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக திகழ்வதாக பல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பந்து வீசும் அவர் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக அழுத்தமான சூழ்நிலையில் துல்லியமான யார்கர் பந்தை வீசும் அவர் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்து வருகிறார்.

டி20 உலகக்கோப்பையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வெறும் 4.17 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார். அதனால் அவர் உலகின் சிறந்த பவுலராக செயல்படுவதாக பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா தாம் எதிர்கொண்டதிலேயே சிறந்த கடினமான சவாலை கொடுத்த பவுலர் என்று ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "நான் எதிர்கொண்டதிலேயே மிகவும் சிறந்த பவுலர் பும்ராவாக இருப்பார். அவர் இந்த உலகிலேயே ஆல் டைம் சிறந்த பவுலராக வருவார் என்று நான் நினைக்கிறேன். அவர் கையிலிருந்து பந்தை வெளியிடும் இடம் மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் அவர் பந்தை தம்முடைய உடலுக்கு முன்பாக வெளியிடுகிறார். அதனால் அவர் தாம் விரும்பும் விஷயத்தை கடைசி நொடியில் மாற்றும் திறமை கொண்டதாக கருதுகிறேன்.

அவரிடம் பந்தை மெதுவாகவும், அற்புதமான யார்கர் பந்துகளையும், பந்தை இருபக்கமும் ஸ்விங் செய்யும் நம்ப முடியாத திறமை இருக்கிறது. அந்த வகையில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருப்பதற்கு தேவையான அனைத்து தந்திரங்களையும் அவர் கொண்டுள்ளார் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Read Entire Article