
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து நானி, 'கோர்ட்' மற்றும் 'ஹிட் 3' ஆகிய 2 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் ஹிட் 3 படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். யுனானிமஸ் புரொடக்சன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது.
சமீபத்தில் 'ஹிட் 3' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது. இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கே.ஜி.எப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இப்படத்தில் நானிக்கி ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.