
சென்னை,
இந்தி மற்றும் மராத்தி மொழி சினிமாவில் பிரபல நடிகையான இருப்பவர் சோனாலி குல்கர்னி. இவர் பல பாலிவுட் பிளாக்பஸ்டர்களில் நடித்திருக்கிறார். அதில், "தில் சாஹ்தா ஹை" (2001) , சிங்கம் (2011) ஆகியவை அடங்கும். இந்தி, மராத்தி மட்டுமில்லாமல் தமிழில் மே மாதம் என்ற படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிக்கும் "தி பாரடைஸ்" படத்தின் மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தில், சோனாலி குல்கர்னி, நானிக்கு அம்மாவாக நடித்துள்ளதாக தெரிகிறது.
எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.