நாத்தனாரை கொடுமைப்படுத்திய நடிகை ஹன்சிகா மீது வழக்குப்பதிவு

1 day ago 1

மும்பை,

நடிகை ஹன்சிகா தமிழில், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, அதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 'ரவுடி பேபி', 'காந்தாரி' போன்ற படங்கள் உள்ள நிலையில், 'நிஷா' என்ற தெலுங்கு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

ஹன்சிகாவின் திருமணம் ஜெய்பூர் அரண்மனையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாள்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி விண்ணப்பம் அளித்தார். பிரசாந்த் மோத்வானியும் அவரது மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில், ஹன்சிகா மற்றும் அவரின் அம்மா மோனா மோத்வானி இருவரும் தன்னைக் கொடுமைப்படுத்தவதாகவும் கணவருடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்தும் அதற்குத் தடையாக இருக்கிறார்கள் என முஸ்கான் மும்பை அம்பாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட ஆய்வாளர், ஹன்சிகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article