நாட்றம்பள்ளி அருகே இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

18 hours ago 2

கணவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சடலத்தை வாங்க மறுத்ததால் பரபரப்பு

ஜோலார்பேட்டை : நாட்றம்பள்ளி அருகே இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள மல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வஜ்ரம் என்பவரின் மகள் பிரியா (30).

இவருக்கும் நாட்றம்பள்ளி அருகே உள்ள அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அப்புனு என்பவரின் மகன் குமரேசன் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜெயப்பிரியா(8) என்ற மகளும் எஸ்வந்த் பிரபாஸ் (6) மகனும் உள்ளனர். குமரேசன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். மேலும் குமரேசனுக்கும் இவரது வீட்டின் அருகே உள்ள பெண் ஒருவருக்கும் தகாத உறவு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் வேலைக்கு சென்ற குமரேசனிடம் கள்ளத்தொடர்பில் உள்ள பெண் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது. இதை பிரியா காண்பித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பிரியா தனது கணவர் குமரேசனிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

பின்னர் இவரது குழந்தைகள் வெளியே இருந்தபோது வீட்டின் அருகில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணை இதை அறிந்த இவரது குழந்தைகள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிவித்து பின்னர் உறவினர்கள் சடலத்தை மீட்டு நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரயோத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து பிரியாவின் கணவர் குமரேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று சொந்த ஊர் திரும்பினார். அப்போது அரசு மருத்துவமனைக்கு வந்தபோது கள்ள தொடர்பு காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கணவனை கைது செய்யக் கோரியும், இரண்டு பிள்ளைகளுக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் பெண்ணின் குடும்பத்தார் சடலத்தை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மருத்துவமனைக்கு வந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது குமரேசன் பயன்படுத்திய செல் நம்பர் மூலம் அவர் பேசிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தார் ஏற்று சடலத்தை வாங்கிச் சென்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post நாட்றம்பள்ளி அருகே இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article