
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். அவரது சமீபத்திய படமான 'தொடரும்' பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்துள்ளது. மலையாள சினிமா வரலாற்றில் எட்டாவது பெரிய வெற்றிப் படமாக இது மாறியுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் 12 நாட்களில் மலையாளத்தில் ரூ.77 கோடி வசூலித்து 'பிரேமலு'வின் ரூ.76 கோடி வசூலை முந்தி அதிக வசூல் செய்த மலையாள படங்களின் பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் வசூலை குவிக்க 'தொடரும்' தயாராகி இருக்கிறது. அதன்படி, இப்படம் வருகிற 9-ம் தேதி தமிழில் வெளியாக உள்ளது. மேலும் பல படங்களின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.