'நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது' - மத்திய மந்திரி பேச்சு

3 hours ago 1

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில், 'இன்வெண்டிவ்-2025' ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளின் கண்காட்சி நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை, மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுகந்த மஜூம்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நேற்று தொடங்கி வைத்தார். சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி, ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் டி.ஜி.சீத்தாராம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியில், நாடுமுழுவதும் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்., மற்றும் என்.ஐ.ஆர்.எப் தரவரிசை பட்டியலில் முதல் 50 இடங்களை பிடித்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை, புத்தாக்க முயற்சிகளை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தின. இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுகந்தா மஜூம்தர் பேசியதாவது:-

"சென்னை ஐ.ஐ.டி கல்வி, ஆராய்ச்சி மற்றும் புது கண்டுபிடிப்புகளில் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்து வரும் தொழில்முனைவோர்கள், தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கிறார்கள்.

தொழில் நிறுவனங்களுக்கான உற்பத்தி துறையில் இந்தியா சிறந்து விளங்குவதற்கும், புதிய தலைமையாக இந்தியா மாறுவதற்கும் தமிழகத்தின் பங்கும் பெரிதும் உள்ளது. இன்வெண்டிவ் 2025 தொழில் நிறுவனங்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமையும்."

இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article