72-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: இன்று தொண்டர்களை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 hours ago 2

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். வாழ்த்தரங்கம், கவியரங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது பிறந்தநாளையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். அதனை தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்த உள்ளார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள், தொண்டர்கள், நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை பெற உள்ளார். பின்னர், கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெறுகிறார்.

பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதல்-அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்ற்னர். முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வின் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் நடத்தி வருகின்றனர்.

முன்னதாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜ எம்பார் ஜீயர் உள்ளிட்டோர் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்தினர்.

தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தலைமை டிஜிபி சங்கர் ஜிவால், காவல் உயர் பயிற்சியக டிஜிபி சந்தீ்ப் ராய் ரத்தோர், உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் அதிகாரிகள், மநீம தலைவர் கமல்ஹாசன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண் உள்ளிட்டோரும் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Read Entire Article