நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாட்டம்

6 months ago 24
நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கட்டடங்கள் நேற்றிரவு கண்கவரும் மின்விளக்குகளால் ஜொலித்தன சண்டிகர் நகரம் முழுவதும் மின்விளக்குகள் தீபாவளியை வரவேற்றன கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் மின்விளக்குகள் ஜொலித்தன தலைநகர் டெல்லியில் குடியரசுத் தவலைவர் மாளிகை ,இந்தியா கேட் ,பிர்லா மந்திர் போன்ற இடங்களில் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. மும்பையின் சிவாஜி பார்க் பகுதியில் மின் விளக்குகளுடன் மெழுகுவர்த்திகளும் ஏற்றி வைக்கப்பட்டு தீபாவளி தீப ஒளி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் வண்ண வண்ண மின்விளக்குகள் வீதிகள் தோறும் அலங்கரிக்கப்பட்டிருந்தன குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பட்டாசுகள் வெடித்தும் கண்கவர் வாண வேடிக்கைகள் நடத்தியும் தீபாவளியை உற்சாகமாக வரவேற்றனர்
Read Entire Article