ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த ஜோஷ் ஹேசில்வுட்

5 hours ago 1

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்களும், படிக்கல் 50 ரன்களும் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 194 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 49 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 4 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐ.பி.எல். வரலாற்றில் ஜோஷ் ஹேசில்வுட் இதுவரை 51 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்த விக்கெட்டுகளை இவர் வெறும் 36 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய 4-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ககிசோ ரபாடா - 27 போட்டிகள்

2. லசித் மலிங்கா - 33 போட்டிகள்

3. கலீல் அகமது - 35 போட்டிகள்

4. ஜோஷ் ஹேசில்வுட்/மிட்செல் மெக்லெனகன் - 36 போட்டிகள் 

Read Entire Article