நாங்கள் இன்னும் ஒரு சரியான போட்டியை விளையாடியதாக நினைக்கவில்லை - அக்சர் படேல்

21 hours ago 3

சென்னை,

ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிஹாம் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் டெல்லி கேப்டன் அக்சர் படேல் அளித்த பேட்டியில் கூறியதாவது, 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அனைவரும் வெற்றியில் பங்காற்றினர். அணியின் சமநிலை நன்றாக இருக்கிறது. கேப்டனாக 3 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெறுவது நல்ல உணர்வைக் கொடுக்கிறது.

ஒவ்வொரு போட்டிகளும் சில சிறப்பான கேட்ச்களும் இருக்கும். அதை தவற விடுவதும் இருக்கும். ஒரு கேப்டனாக அணி இதுவரை ஒரு கச்சிதமான போட்டியை விளையாடியது என்று நான் நினைக்கவில்லை. ஐ.பி.எல். மிகப்பெரிய தொடர். அதில் வேகம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article