நாக்பூர் மைதானத்தில் நாளை; முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து மோதல்: வெற்றியுடன் தொடங்கப்போவது யார் ?

3 months ago 6

நாக்பூர்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 5 போட்டி கொண்ட டி.20 தொடரை 4-1 என இந்தியா கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகளிலும் இரு அணிகளும் மோத உள்ளன. இதில் முதல் ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நாளை நடக்கிறது. இதற்காகஇரு அணி வீரர்களும் கடந்த 2 நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, துணை கேப்டன் சுப்மன்கில் உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானடெஸ்ட் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாட வில்லை.

இதனால் ஒருநாள் போட்டியில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப்பன்ட், கே.எல்.ராகுல் இடையே கடும்போட்டி உள்ளது. இருப்பினும் கே.எல்.ராகுல் முன்னிலையில் உள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் ஆர்டரில் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா , அக்சர் பட்டேல் இடம்பெறக்கூடும். பும்ராஇல்லாத நிலையில் அர்ஷ்தீப் சிங், முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கும். ஷமி 14 மாதங்களுக்கு முன்ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் போட்டியில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி உள்ளனர்.

மறுபுறம் இங்கிலாந்து அணி டி.20 தொடரை இழந்த நிலையில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. பட்லர் தலைமையிலான அணியில் ஜோ ரூட் , பென் டக்கெட், ஹாரி புருக் மீது பேட்டிங்கில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தங்கள் அதிரடி பாணி ஆட்டத்தை இதிலும் தொடரும் முனைப்பில்உள்ளனர். பவுலிங்கில் மார்க்வுட், ஆர்ச்சர்,அடில் ரஷித் இந்திய அணிக்கு நெருக்கடிஅளிக்க காத்திருக்கின்றனர். வரும் 19ம்தேதி சாம்பியன் டிராபி தொடங்கும் நிலையில் இந்த தொடர் இரு அணிகளுக்கும் நல்ல பயிற்சி களமாக இருக்கும். இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படிநாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதனை ஸ்போர்ட்ஸ் 18, ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.

இந்திய உத்தேச அணி: ரோகித்சர்மா, கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல்(வி.கீ), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல் / ஹர்திக் ரானா, குல்தீப் யாதவ் / வருண்சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி.
இங்கிலாந்து அணி: பென் டக்கெட், பில் சால்ட் (வி.கீ), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கே), லிவிங்ஸ்டன், ஜேமி ஓவர்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட்.

The post நாக்பூர் மைதானத்தில் நாளை; முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து மோதல்: வெற்றியுடன் தொடங்கப்போவது யார் ? appeared first on Dinakaran.

Read Entire Article