நாகூர் தர்கா கந்தூரி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

3 days ago 2

நாகை,

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டு தோறும் பெரிய கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 468-வது பெரிய கந்தூரி விழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. மறுநாள்(12-ந்தேதி) அதிகாலை பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக்கிறது. கந்தூரி விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகம்மது காஜி ஹீசைன் சாஹிப் மற்றும் போர்டு ஆப் டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

Read Entire Article