
வருகிற கோடை காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக குறிப்பிட்ட ரெயில்களில் 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இது குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:-
கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்:
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண்: 22681) புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லா பெட்டி ஆகிய 6 பெட்டிகள் இன்று(மார்ச் 1) முதல் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வரை தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கு (வண்டி எண்: 22682) வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரெயிலிலும் இன்று முதல் 19 ஜூலை வரை அதே 6 பெட்டிகள் இணைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு (வண்டி எண்: 22657) திங்கள், புதன், ஞாயிறு ஆகிய தினங்களில் இயக்கப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அதில் ஒரு ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, இரண்டு ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், இரண்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லா பெட்டி ஆகிய 6 பெட்டிகள் மார்ச் 2 முதல் ஜூன் மாதம் 16 ஆம் தேதி வரை தற்காலிகமாக இணைக்கப்பட்டுகிறது.
அதே சமயம் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு (வண்டி எண்: 22658) திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் இந்த ரெயிலிலும் மார்ச் 3 முதல் 17 ஜூலை வரை அதேபோல் 6 பெட்டிகள் இணைக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.