
நாகர்கோவில் வடசேரி போலீசார் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று எஸ்.எம்.வி. பள்ளிக்கு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போதைப்பொருட்கள் விற்றதாக கூறி இடலாக்குடியை சேர்ந்த அபுபக்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் 14 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஆயுதப்படை முகாம் சந்திப்பு பகுதியில் போதைப்பொருட்கள் விற்றதாக கூறி பெரியவிளையை சேர்ந்த அய்யப்பனை நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் 2 போதைப்பொருள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.