
சென்னை,
கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த விண்ணைதாண்டி வருவாயா படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான சமந்தா பானா காத்தாடி படத்தின் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம், தீயா வேலை செய்யனும் குமாரு என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமெ போதுமான ரீச் கொடுக்கவில்லை. திருமண வாழ்க்கை, அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டபோதும் முடங்கிப் போகாமல் தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணமா வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், சமந்தாவின் இன்ஸ்டா போஸ்ட் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த போஸ்டில், 'தடைகளை உடைத்து... தங்களோட வாழ்க்கையவே மாற்றியமைத்து...நினைத்தபடி ஒரு மாஸ்டர் பீசா உருவாகியுள்ள பெண்கள்... தங்களோட கதையை சொல்லுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். இதன் கமெண்ட் பக்கத்தில் எக்கச்சக்கமான பெண்கள் தங்களோட ஸ்டோரியை எழுதியிருக்கிறார்கள்.