நாகப்பட்டினம்,பிப்.15: ஒரு வருடத்தின் ஒவ்வொரு காலாண்டிற்கும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும். இந்நிலையில் 2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் வரும் 8ம் தேதியன்று நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முன்னிட்டு நேற்று (14ம் தேதி) மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் கந்தகுமார் தலைமையில் முன் அமர்வு லோக் அதாலத் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் தீர்வு மைய அலுவலகத்தில் நடந்தது.
நில ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ரூ.1 கோடியே 16 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. முன் அமர்வு லோக் அதாலத்தானது நாகப்பட்டினம் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மணிவண்ணன், மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் அமர்வின் கீழ் நடந்தது. இந்த முன் அமர்வு லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் கந்தகுமார் ஆணை வழங்கினார்.
The post நாகப்பட்டினம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.1.16 கோடிக்கு தீர்வு appeared first on Dinakaran.