நாக சைதன்யா-சாய் பல்லவி நடித்துள்ள 'தண்டேல்' படத்தின் முதல் நாள் வசூல்

3 months ago 14

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் நேற்று உலக அளவில் வெளியான படம் 'தண்டேல்'. இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் மற்றும் அல்லு அரவிந்த் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்னர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2019-ம் ஆண்டு ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

நேற்று வெளியாக இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ. 21.27 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் நாக சைதன்யாவின் வாழ்க்கையில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்று கூறப்படுகிறது. இனி வரும் நாட்கள் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

#BlockbusterThandel collects . on Day 1 with terrific response and word of mouth all over A super strong Day 2 on cards ❤️Book your tickets for DHULLAKOTTESE BLOCKBUSTER #Thandel now!️ https://t.co/5Tlp0WNszJ pic.twitter.com/1sTIOAz1Nr

— Thandel (@ThandelTheMovie) February 8, 2025
Read Entire Article