நவீன உலகிற்கான தனித்துவ எடுத்துக்காட்டாக இந்தியாவின் ஜனநாயகம் திகழ்கிறது; ஜனாதிபதி முர்மு உரை

2 weeks ago 2

புதுடெல்லி,

டெல்லியில் 15-வது தேசிய வாக்காளர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வாக்காளர்கள் அனைத்து வகையான குறுகிய மனப்பான்மை, வேற்றுமை மற்றும் சலனம் ஆகியவற்றை விடுத்து, வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.

இந்தியாவின் ஜனநாயகம், நவீன உலகிற்கான தனித்துவ எடுத்துக்காட்டாக திகழ்கிறது. நம்முடைய தேர்தல் நடைமுறை மற்றும் நிர்வாகம் ஆகியன பற்றி உலகின் பல நாடுகள் கற்று கொண்டிருக்கின்றன என்றும் பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், நாட்டில் அமைதியான முறையில் தேர்தல்கள் நடைபெற உறுதி செய்த மற்றும் சிறந்த செயல்பாட்டுக்காக மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு சிறந்த தேர்தல் நடைமுறை விருதுகளை முர்மு வழங்கினார். இதனை ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

Read Entire Article