![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38437472-rasi-palan.webp)
வார ராசி பலன்
மேஷம்
தலைமை ஏற்கும் பண்பும், புதுமை படைக்கும் புத்தாக்க சிந்தனையும் கொண்ட மேஷம் ராசியினர் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு, நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்களை செயல்படுத்துவர். பெண்கள் குடும்ப செலவுகளை கையில் உள்ள சேமிப்பை வைத்து சமாளித்து விடுவீர்கள். தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பாரா சிக்கல்களை சந்தித்து அவற்றைக் கடந்து வெற்றி பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்கள் பணிகளில் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து அனைவரும் பாராட்டும் காரியங்களில் ஈடுபடுவார்கள். வெளியிடங்களில் நேரம் தவறி உண்பதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு சீராகும். மருத்துவ சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை இயன்றவரை செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும்.
ரிஷபம்
வித்தியாசமாக யோசித்து புதியன படக்கும் திறனும், சமையல் கலையில் திறமையும் கொண்ட ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் பல நன்மைகள் வீடு வந்து சேரும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை தன வரவில் எந்த தடைகளும் ஏற்படாது. தொழில் துறையினர், வியாபாரிகள் மனதில் நினைத்த திட்டங்களை செயல்படுத்தி வெற்றி காணலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் உழைப்பு காரணமாக மன உளைச்சல் அடைவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மன அழுத்தம், ஜீரணக் கோளாறு, தலைவலி ஆகியவை ஏற்பட்டு குணமடையும். இந்த வாரம் குறைந்தபட்சம் ஆறு நபர்களுக்காவது அன்னதானம் அல்லது ஆடை தானம் செய்வதன் மூலம் அதிர்ஷ்ட தேவதையின் அருள் உங்களை தேடி வரும்.
மிதுனம்
மனதில் எழும் கருத்துக்களை சிறப்பாக வெளிப்படுத்தும் திறமையும், பேச்சுக்கலையில் வல்லமையும் பெற்ற மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பொருளாதார வரவு உண்டு. பெண்மணிகள் எதிர்பாரா குடும்ப செலவுகளை உங்களுக்கே உரிய பாணியில் சமாளித்து விடுவீர்கள். தொழில் துறையினர், வியாபாரிகள் புதிய வாய்ப்புகளைப் பெற்று தொழில் வளர்ச்சிக்குரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் பலரது எதிர்ப்புகளை சமாளித்து பணியாற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். பற்களில் பாதிப்பு, வயிற்றுக் கோளாறு ஆகியவை ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையின் மூலம் விலகும். மகாவிஷ்ணுவின் திருக்கோவிலுக்கு தேவையான வாசனை மலர் மாலைகள், வாசனாதி திரவியங்கள், ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி ஆகியவற்றை உங்கள் சக்திக்கேற்ப வாங்கி கொடுப்பதால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
கடகம்
மற்றவர்கள் மீது அனுதாபமும், ஆதரவும் காட்டுவதுடன், தாமாகவே மற்றவர்களை தேடிச் சென்று உதவி செய்யும் கடக ராசியினருக்கு இந்த வாரம் மனதில் ஒருவித குழப்பம் ஏற்பட்டு படிப்படியாக அகலும். குடும்ப பொருளாதாரத்தைப் பொறுத்தவரை செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய முயற்சி மேற்கொண்டு முன்னேற்றம் அடைவர். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரி ஆதரவை பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆசிரியர்களது பாராட்டை பெறுவார்கள். மனக்குழப்பம் காரணமாக தலைவலி, உடல் நடுக்கம் ஏற்பட்டு குணமடையும். நாகதேவதை கோவிலுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கி தருவது அல்லது புற்றுக் கோவிலுக்கு பால் மற்றும் மஞ்சள் வாங்கி தருவது ஆகியவற்றின் மூலம் பல சிக்கல்கள் விலகும்.
சிம்மம்
தன்னம்பிக்கையோடு எதையும் அணுகும் தைரியமும், எதிலும் துணிச்சலாக இறங்கி செயலாற்றும் திறமையும் உள்ள சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். அதை எப்படியோ உருட்டிப்புரட்டி சரி செய்து விடுவீர்கள். எதிர்பாரா செலவுகளால் சேமிப்பு கரையும். தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய சிக்கல்களை சந்தித்து வெற்றிகரமாக தீர்வு காண்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தின் சுமுகமான போக்கு மகிழ்ச்சி தரும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி உண்டு. மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் வயதானவர்களுக்கு உங்களுடைய கைகளால் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்குவதன் மூலம் இறையருள் உங்களை நாடித் தேடி ஓடிவரும்.
கன்னி
மனித மனங்களையும், அவர்களது செயல்களையும் பகுத்து ஆய்ந்து உணர்ந்து அதற்கு ஏற்ப திட்டமிடும் கன்னி ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்ப நிலையை பொறுத்தவரை உறவினர்களது கருத்துக்களால் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில்துறையினர், வியாபாரிகளுக்கு எதிர்பாராத செலவினங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த நன்மைகளை பெற்று உள்ளம் மகிழ்வர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி, எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுவார்கள். அலைச்சல் காரணமாக உடல் சோர்வு, காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு சிகிச்சையால் விலகும். கன்றுடன் கூடிய பசுமாட்டுக்கு வாழைப்பழங்கள், அகத்திக்கீரை உள்ளிட்ட காய்கறிகளை உண்ணக் கொடுப்பது, நாய்களுக்கு உணவிடுவது ஆகியவற்றின் மூலம் சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருகும்.
துலாம்
எண்ணங்களில் குழப்பம் இருந்தாலும் தங்களுடைய செயல்களில் சீரான நிலையோடு காரியங்களை செய்து முடிக்கும் திறன் பெற்ற துலாம் ராசியினர் இந்த வாரம் பல தடைகளை கடந்து மனதில் நினைத்த காரியத்தை செயல்படுத்துவீர்கள். குடும்ப உறவில் குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்த்த பணவரவு தடை தாமதங்களுக்கு பிறகு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியில் தடைகளை சந்தித்தாலும், மற்ற விஷயங்களில் திறமைகளை வெளிப்படுத்துவர். முதியோர்கள், மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கு பரிசுப் பொருள்களை தந்து அவர்களை மகிழ்விப்பதும், குடும்ப பெரியவர்களை வணங்கி அவர்களுடைய ஆசிகளை பெறுவதும் பல சிக்கல்களுக்கு தீர்வாக அமையும்.
விருச்சிகம்
ஆழமான மன உணர்வுகளையும், ஆராய்ச்சி நோக்கில் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ளும் தன்மையும் கொண்ட விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் பல்வேறு எதிர்கால திட்டங்கள் உருவாகும். குடும்ப பொருளாதாரத்தைப் பொறுத்தவரை எப்படியோ வரவுகள் வந்து செலவுகளை சமாளிப்பீர்கள். தொழில்துறையினர், வியாபாரிகள் தொழிலில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றி பெறுவர். உத்தியோகஸ்தர்கள் மனதில் எதிர்பார்த்திருந்த நல்ல விஷயங்கள் கையில் வந்து சேரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இப்பொழுதிருந்தே கவனமாக படித்தால் நிச்சயம் சிறப்பிடம் பெற்று தேர்வில் வெற்றி பெறுவார்கள். மன உளைச்சல், தலைவலி மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு விலகும். வீட்டிற்கு அருகில் உள்ள எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் அங்கு நடக்கும் அபிஷேகத்திற்கு பசும்பால், இளநீர், தேன் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தால் சங்கடங்கள் உங்களை விட்டு விலகும்.
தனுசு
தத்துவ ரீதியாக வாழ்க்கையை புரிந்து கொள்வதும், பயணங்கள் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளும் தன்மையும் கொண்ட தனுசு ராசியினருக்கு இந்த வாரம் சற்று காலம் தாழ்த்தி காரிய வெற்றி கிடைக்கும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை பழைய கடன்கள் தீர்ந்து புதிய கடன் ஏற்படும். தொழில்துறையினர், வியாபாரிகள் தங்கள் வழக்கமான பணிகளில் மட்டும் ஈடுபட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் வேறு வேலை மாற்றத்திற்கு முயற்சி செய்யும் எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைக்கவும். அதற்குரிய காலம் கனியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். உடல் நிலையில் வயிறு, தலை, முதுகு ஆகிய பகுதிகளில் வலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் விலகும். சிவன் கோவிலில் கருவறையில் இருந்து கொண்டிருக்கும் தூண்டா விளக்குக்கு சுத்தமான பசு நெய் வழங்குவதன் மூலமாகவும், திருநீறு வாங்கிக் கொடுப்பதன் மூலமாகவும் மகிழ்ச்சியான செய்திகள் உங்களை வந்து சேரும்.
மகரம்
எந்த ஒரு விஷயத்தையும் பொறுப்புணர்வோடு அணுகும் தன்மையும், திட்டமிட்டு அந்த செயலை முடிக்கும் திறமையும் உள்ள மகர ராசியினருக்கு இந்த வாரம் மனதில் ஏற்பட்ட சஞ்சலங்கள் விலகி தெளிவு ஏற்படும். குடும்ப பொருளாதாரத்தை பொறுத்தவரை செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற பண வரவும் உண்டு. தொழில் துறையினர், வியாபாரிகள் புதிய வர்த்தக வாய்ப்புகளை பெற்று தொழில் விருத்தி செய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. உத்தியோகஸ்தர்கள் புதிய பணியிட மாற்றத்தை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாதாந்திர தேர்வுகளில் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும். உடல் நலனில் அடிவயிற்று பகுதியில் வலி, முதுகு வலி ஆகியவை ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். திருக்கோவிலில் வந்து கடவுளை வழிபட்டு வீடு திரும்பும் இளம் பெண்களுக்கு இனிப்புகள் வழங்குவதும், பள்ளி மாணவியர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்குவதும் இனிமையான சூழலை குடும்பத்தில் உருவாக்கும்.
கும்பம்
மனதில் புதுமையான எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டு, மனிதநேய உணர்வுகளோடு செயல்படும் கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் திட்டமிட்ட பல விஷயங்களை செய்து முடிக்கும் மன உறுதி உருவாகும். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில்துறையினர், வியாபாரிகள் புதிய முதலீடுகளை மேற்கொண்டு ஆதாயம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு பெறுவதற்கு காலம் கனிந்து விட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களுடைய வழிகாட்டுதல் மூலம் தங்களுடைய கல்வியில் சிறந்த முன்னேற்றம் பெறுவார்கள். பல இடங்களுக்கும் சென்று வருவதால் காய்ச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறு ஆகியவை ஏற்பட்டு குணமடையும். இயன்ற வரையில் மவுன விரதம் இருந்து குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் கோவிலை ஆறு அல்லது 12 முறை வலம் வந்து தீபம் ஏற்றி வைத்து வணங்கினால் மனதில் நினைத்த விஷயங்கள் நல்லவிதமாக நடந்து ஏறும்.
மீனம்
உள்ளுணர்வால் பல விஷயங்களை முன்னதாகவே உணரும் தன்மையும், கலைகளில் ஈடுபாடும் கொண்ட மீனம் ராசியினருக்கு இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும். உறவினர் ஆதரவோடு அவற்றை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். குடும்ப பொருளாதாரத்தில் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். தொழில்துறையினர், வியாபாரிகள் மனதில் நீண்ட நாட்களாக நினைத்து வந்த புதிய திட்டங்களை செயல்படுத்தி லாபம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பல பொறுப்புகள் ஏற்படும். மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பது குறித்த வழிகாட்டுதலை பெறுவார்கள். நுரையீரல் பாதிப்பு, இருமல் ஆகியவை ஏற்பட்டு தகுந்த சிகிச்சையால் நீங்கும். தூய்மை பணியாளர்கள், சிறப்பு தைப்பவர்கள், ஆதரவற்ற அனாதைகள் ஆகியோருக்கு உங்களால் இயன்றவரை அன்னதானமோ பொருள் தானோ செய்வதன் மூலம் மனதில் நிம்மதியும், இறை அருளும் பெருகும்.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38437332-jothitam.webp)