![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/26/35842243-sta.webp)
சென்னை,
ஹாலிவுட் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல், ஹாலிவுட் வெப் தொடருக்கும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. தற்போது 5-வது சீசன் உருவாகி வருகிறது. இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும். சமீபத்தில், இந்த தொடரின் 8 எபிசோடுகளின் தலைப்பு வெளியானது.
5-வது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக புகைப்படங்களை பகிர்ந்து 2025-ம் ஆண்டு சந்திப்போம் என்று தெரிவித்தது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் நவம்பர் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.