டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்தது.இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில்;
* தாக்குதலை நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு
* துல்லியமாக தாக்கும் திறன்படைத்த அதிநவீன குண்டுகளை பயன்படுத்தி இலக்குகளை குறிவைத்து முப்படைகளும் இணைந்து அதிரடி தாக்குதல்
* பஹல்காமில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில் ஆபரேஷன் சிந்தூர்
* இந்திய உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு தாக்குதல் அரங்கேற்றம்
* தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் மீண்டும் தாக்குதல் தேவையா என கண்காணிப்பு
* தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் அரங்கேற்றம்
* பிரதமரின் ஒப்புதலுக்குப் பிறகு தாக்குதலை அரங்கேற்றிய முப்படைகள்
* ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஒரு குறிப்பிட்ட சிலருக்கே தகவல் பரிமாறப்பட்டதாக தகவல்; பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதலைக் கண்காணித்த பிரதமர் நரேந்திர மோடி
The post நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் -திட்டமிட்டது எப்படி?.. முப்படைகள் எவ்வாறு தாக்கியது? appeared first on Dinakaran.