சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவிப்பு!

17 hours ago 4

மும்பை: ரசிகர்களால் ஹிட்மேன் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரோஹித் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடினார்.

அத்தொடரில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் ஓய்வு பெறுவதாக ரோஹித் அறிவித்துள்ளார். இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4,301 ரன்கள் எடுத்துள்ளார்.

அதில் 12 சதங்கள், 18 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு குறித்து தனது இன்ஸ்டா பதிவில் ரோஹித் தெரிவித்துள்ளதாவது: “நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்கிறேன். வெள்ளை நிற ஜெர்ஸியில் இந்தியாவுக்காக விளையாடியது எப்போதும் பெருமையானது. இவ்வளவு ஆண்டுகளாக எனக்குக் கிடைத்த அன்பு, ஆதரவுக்கு நன்றிகள்.

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடுவேன்” என தெரிவித்துள்ளார். 38 வயதான ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையையும், சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதும் சர்வதேச டி20 அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்திருந்தார்.

The post சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article