கறம்பக்குடி, மே 15: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நரங்கியப்பட்டு கிராமம் முத்து வேம்பையா சுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன் பிறகு தினந்தோறும் ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பாக இன்னிசை நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் வெகு சிறப்பாக நடைபெற்றன. தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமிவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மது எடுத்தல் நிகழ்வுடன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை பக்தர்கள் பொதுமக்கள் வேண்டிக் கொண்டு பால் காவடி, பறவை காவடி, செடல் காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்திக் கொண்டனர். அன்று மாலை 6 மணி முதல் கோவில் வளாகத்தில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து நான்கு வீதிகளிலும் தேரானதுவலம் வந்து இரவு 9 மணி அளவில் நிலை நிறுத்தப்பட்டது. முத்துவேம்பையா சுவாமி கோவில் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நரங்கியப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பக்தர்கள் திரளாக வருகை தந்து சிறப்பித்தது தேரை வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
The post நரங்கியப்பட்டு முத்து வேம்பையா கோவில் தேரோட்டம் appeared first on Dinakaran.