நம் முதலமைச்சரின் லட்சியத்திற்கு, Global Sports City முக்கிய பங்காற்றும் என்பதில் மகிழ்ச்சி : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!

3 months ago 14

சென்னை : சென்னை அருகே அமையவிருக்கும் உலக தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் தமிழ்நாட்டை விளையாட்டு போட்டிகளில் மட்டுமல்ல விளையாட்டு துறை சார்ந்த கட்டமைப்பிலும் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக வேண்டும் என்ற முதலமைச்சரின் இலட்சியத்திற்கு முக்கிய பங்காற்றும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னைக்கு அருகே உலகத்தரத்திலான Global Sports City அமைப்பதற்கான பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை இன்று நடத்தினோம்.

இக்கூட்டத்தில், உலகளவிலான விளையாட்டு நகரத்தை உருவாக்குவது தொடர்பாக நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நீர்வளத்துறை, வீட்டு வசதித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, CMDA உட்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றோம்.இதற்காக நிலம் கையகப்படுத்துவது, Sports City-க்கான உட்கட்டமைப்பு வசதிகள், வடிவமைப்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்தோம். தமிழ்நாட்டை விளையாட்டு போட்டிகளில் மட்டுமல்ல, விளையாட்டுத்துறை சார்ந்த கட்டமைப்பிலும், இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக்க வேண்டும் எனும் நம் முதலமைச்சர் அவர்களின் லட்சியத்திற்கு, Global Sports City முக்கிய பங்காற்றும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நம் முதலமைச்சரின் லட்சியத்திற்கு, Global Sports City முக்கிய பங்காற்றும் என்பதில் மகிழ்ச்சி : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Read Entire Article