சூடானில் 2 நாட்களில் காலரா நோயால் 58 பேர் பலி: 1,300 பேருக்கு தீவிர சிகிச்சை

3 hours ago 3

சூடான்: சூடானில் காலரா தொற்று வேகமாக பரவுவதால் இதுவரை 58 பேர் இறந்துள்ளனர்; மேலும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூடான் நாட்டில் சுத்தமான குடிநீர் பற்றாக்குறை, மோசமான காலநிலை மற்றும் சுகாதார நிலைமைகள் இருப்பதால் ‘காலரா’ தொற்று வேகமாக பரவி வருகிறது. சூடான் மக்களை காக்கும் பொருட்டு, சர்வதேச சுகாதார சேவைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் காலரா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சூடானில் உள்ள ஒரு நகரத்தில் மற்றும் கடந்த மூன்று நாட்களில் காலரா தொற்று பாதிப்பால் 58 பேர் பலியாகினர். கிட்டத்தட்ட 1,300 பேர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு சூடானின் கோஸ்டியில் மாசுபட்ட குடிநீரை பயன்படுத்தியதால் காலரா பரவியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால், முக்கிய நகரங்களில் குடிநீர் ஆலைகள் மூடப்பட்டதாகவும், இதன் விளைவாக மாசுபட்ட குடிநீர் அவ்வப்போது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

காலரா நோய் தொற்று என்பது தண்ணீர் மற்றும் உணவு மூலம் பரவும் தீவிரமான தொற்று நோயாகும். காலரா, விப்ரியோ காலரா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் நீரிழப்பை ஏற்படுத்தும். சரியான சிகிச்சை பெறாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சூடானில் 2 நாட்களில் காலரா நோயால் 58 பேர் பலி: 1,300 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Read Entire Article