கேரள எம்பியின் மகளை பாம்பு கடித்தது: மருத்துவமனையில் அட்மிட்

3 hours ago 2

ஆலப்புழா: கேரள எம்பி ஜோஸ் கே.மணியின் மகள் பிரியங்காவை பாம்பு கடித்ததால், அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பியான ஜோஸ் கே.மணியின் மகள் பிரியங்கா, ஆலப்புழாவில் உள்ள மூதாதையர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த பிரியங்காவை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது.

உடனடியாக வீட்டில் இருந்த உறவினர்கள், பிரியங்காவை மீட்டு ஆலப்புழாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்த வகையான பாம்பு கடித்தது என்பது தெரியவில்லை. மயக்க நிலையில் இருந்து மீண்ட பிரியங்கா, தற்போது நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து எம்பி ஜோஸ் கே.மணி கூறுகையில், ‘எனது மகள் தற்போது நலமாக இருக்கிறார். எனது மகளின் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி ெதரிவித்துக் கொள்கிறேன். இன்று பிரியங்கா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என்று தெரிவித்தார்.

The post கேரள எம்பியின் மகளை பாம்பு கடித்தது: மருத்துவமனையில் அட்மிட் appeared first on Dinakaran.

Read Entire Article