நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தில் 'சபா நாயகன்' பட நடிகை?

3 months ago 25

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது அவரது 109-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்குகிறார்.

எஸ் தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில், பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில், ஏற்கனவே ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், இப்படத்தில் மற்றொரு நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு தமிழில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'சபா நாயகன்' படத்தில் நடித்த நடிகைகளில் ஒருவரான சாந்தினி சவுத்ரி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article