நத்தம், ஜன. 7: நத்தத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை மோட்டார் வாகன ஆய்வாளர், நத்தம் பகுதி அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு நத்தம் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி தலைமை தாங்கி வாகன ஒட்டுநர்களுக்கான சாலை விதிகள், பாதுகாப்பு, ஒழுங்கு முறைகள் குறித்து விளக்கினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நத்தம் கிளை மேலாளர் தினகரன், பட்டியல் வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு வாகன சட்டங்கள் பற்றியும், சாலை போக்குவரத்தில் கையாளப்படும் விதிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். இதில் சட்டப் பணியாளர்கள் பழனியப்பன் சுரேஷ், ஓட்டுநர் பயிற்சி பள்ளி பயிற்றுநர்கள், டூ – வீலர், ஆட்டோ, கார், மினிவேன் , கனரக வாகன ஓட்டுநர்கள், என சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அலுவலக கண்காணிப்பாளர் குமார் நன்றி கூறினார்.
The post நத்தத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.