நடிகை ஹன்சிகா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

6 months ago 38

மதுரை,

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, அதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 'ரவுடி பேபி', 'காந்தாரி' போன்ற படங்கள் உள்ள நிலையில், 'நிஷா' என்ற தெலுங்கு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

மேலும் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஹன்சிகா பிரசித்த பெற்ற ஸ்தலங்களில் வழிபாடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹன்சிகா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். கோவிலின் அம்மன் சன்னதி வழியாக சென்று மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கும் சென்று சிறப்பு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு வெளியே வந்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். அது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாயுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த ஹன்சிகா..கேமராவை பார்த்ததும் கொடுத்த ரியாக்சன்#hansika_motwani #madurai #thanthitv pic.twitter.com/PozvJVBhYd

— Thanthi TV (@ThanthiTV) October 6, 2024
Read Entire Article