நடிகை ஐஸ்வர்யா ராயின் மெய்காப்பாளரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

3 months ago 20

புனே,

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மெய்காப்பாளர்களை நியமிப்பது வழக்கம். அவர்களுக்கு அடுத்து நடிகர், நடிகைகளும் தங்களுடைய பாதுகாப்புக்காக என்று மெய்காப்பாளர்களை வைத்து கொள்வார்கள்.

அவர்கள் விமான நிலையம், திறப்பு விழா, விருந்து நிகழ்ச்சி மற்றும் திருமணம் போன்ற முக்கிய விசேஷங்களுக்காக பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது, மெய்காப்பாளர்கள் அவர்களை சுற்றி பாதுகாப்பு அரணாக செயல்படுவார்கள். வசீகரம் மற்றும் கவர்ந்திழுக்கும் அழகுக்காக திரை துறையில் அதிக பிரபலம் வாய்ந்தவராக அறியப்படும் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்.

அவரை காண்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அவருடைய மெய்காப்பாளராக இருப்பவர் சிவராஜ். நடிகை ஐஸ்வர்யா ராய் வெளியே செல்லும்போது, அவரை காண்பதற்காக ரசிகர் கூட்டம் திரண்டு விடும். அவரை பாதுகாக்கும் முக்கிய பொறுப்பை சிவராஜ் மேற்கொண்டு வருகிறார்.

2015-ம் ஆண்டு சிவராஜின் திருமணத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் சென்றார். அதுபற்றிய புகைப்படங்கள் சமூக ஊடகத்தில் வெளிவந்து வைரலாகின. இதனால், ஒவ்வொருவரின் மனதிலும் ஐஸ்வர்யா ராய் இடம் பிடித்து விட்டார்.

ஐஸ்வர்யா ராய் வெளியே செல்வது அரிது என்றபோதிலும், எப்போதெல்லாம் அவர் வெளியே செல்கிறாரோ அப்போது, சிவராஜின் பணி தொடங்கி விடும். அப்போது, அவரை ஒருவரும் நெருங்கி விட முடியாது. மெய்காப்பாளர்களை பணியில் அமர்த்துவது என்பது அதிக மதிப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற நடிகர், நடிகைகளின் மெய்காப்பாளர்கள் பல லட்சங்களில் சம்பளம் பெறுகின்றனர். இவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மேலதிகாரிகளை விட கூடுதலாக சம்பளம் பெறுகிறார்கள். சிவராஜும் பல லட்சங்களில் சம்பளம் பெறுபவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

Read Entire Article