நடிகை அனுஷ்கா நடித்த 'காதி' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

2 months ago 13

சென்னை,

'அருந்ததி' பேய் படத்தில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, மாதவன், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. தற்போது இவர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் "காதி" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகை அனுஷ்கா செட்டி மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார்.

நடிகை அனுஷ்கா இன்று தன்னுடைய 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு காதி படக்குழுவினர் அனுஷ்கா ஷெட்டியின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்கள். இந்த திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்று அவரது  ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Prepare for the mighty queen's rightful return to power and her reign over the #GHAATI#GhaatiGlimpse out now ▶️ https://t.co/aanFvSxpIkHappy Birthday to 'The Queen' #AnushkaShetty ✨In Telugu, Tamil, Hindi, Kannada and Malayalam.#HappyBirthdayAnushkaShettypic.twitter.com/XuxZEMpz2I

— UV Creations (@UV_Creations) November 7, 2024
Read Entire Article