'நடிகர்கள் நட்சத்திரமாகும் வரை தங்கள் வாழ்க்கையைத் திட்டமிட முடியாது' - நடிகை சம்வேத்னா சுவால்கா

3 months ago 22

மும்பை, ,

வளர்ந்து வரும் நடிகையான சம்வேத்னா சுவால்கா சமீபத்தில் வெளியான 'கியாரா கியாரா' என்ற தொடரில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது இவர் 'ஹனிமூன் போட்டோ கிராப்பர்' என்ற தொடரில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் கடந்த 27-ம் தேதி ஓ.டி.டியில் வெளியானது.

இந்நிலையில், நடிகர்கள் நட்சத்திரமாகும் வரை தங்கள் வாழ்க்கையைத் திட்டமிட முடியாது சம்வேத்னா சுவால்கா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'நான் தற்போது ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு முன்பு நான் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதுதான் நான் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்த முதல் தொடராகும். என்னைப் போன்ற நடிகைளுக்கு ஓ.டி.டி ஒரு கேம் சேஞ்சர். இதற்கு நாம் பெரிய நட்சத்திரமா அல்லது சிறிய நட்சத்திரமா என்பது தெரியாது. வருமானத்திற்காக பெரிய நட்சத்திரங்களையே முழுமையாகச் சார்ந்திருக்கும் கதை இதற்கு தேவையில்லை.

எனவே என்னைப் போன்றவர்களும் இதில் நடிக்கலாம். நல்ல கதை கொண்ட ஒரு படம் அனைத்து ஊடகங்களிலும் வெற்றி பெறுகிறது. நீங்கள் ஒரு நட்சத்திரமாக மாறும் வரை உங்கள் வாழ்க்கையை உண்மையில் திட்டமிட முடியாது' என்றார்.

Read Entire Article